MARC காட்சி

Back
திருஅன்பில் வடிவழகிய நம்பி திருக்கோயில்
245 : _ _ |a திருஅன்பில் வடிவழகிய நம்பி திருக்கோயில் -
246 : _ _ |a பிரம்மபுரி
520 : _ _ |a திருமழிசையாழ்வாரால் மட்டும் தலைப்பில் கொடுக்கப்பட்ட ஒரேயொரு பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இத்தலம் மிகவும் தொன்மையானதாகும். சுந்தர சோழன் தன் எதிரிகளோடு போருக்குச் செல்வதற்கு முன், தனது உடைவாளை இப்பெருமானுக்கு முன் வைத்து வணங்கிச் சென்று போரில் வெற்றி வாகை சூடினான் என்றும், அதற்கு நன்றிக் காணிக்கையாக இத்தலத்திற்கு இறையிலி (ஏராளமான நிலதானம்) செய்ததையும் கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது. இக்கோவிலின் பிரகாரத்திலும், சுற்று மதில்களிலும், நடை பாதையிலும் கூட ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. மிகச் சாதாரண நிலையில், சிற்சில பழுதுபாடுகளுடன் விளங்கினாலும், இத்தலம், தொன்மையினாலும், மேன்மையிலும் மிக உயர்ந்ததுதான்.
653 : _ _ |a கோயில், வைணவம், பெருமாள், விஷ்ணு, திவ்யதேசம், மங்களாசாசனம், தொண்டை நாட்டுத் திருத்தலம், திருமங்கையாழ்வார், திருஅன்பில், வடிவழகிய நம்பி
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / சோழர், விசயநகரர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
914 : _ _ |a 10.8677199
915 : _ _ |a 78.8821578
916 : _ _ |a வடிவழகிய நம்பி
917 : _ _ |a சுந்தரராஜன்
918 : _ _ |a அழகிய வல்லி நாச்சியார்
923 : _ _ |a மண்டுக தீர்த்தம் - கொள்ளிடம்
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a வைகுண்ட ஏகாதசி, இராமநவமி
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் வடிவழகிய நம்பி, கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்டப்பட்டுள்ளார். அழகியவல்லி நாச்சியார் தனி திருமுன் உள்ளது.
930 : _ _ |a பிரம்மதேவனுக்கும், சிவபெருமானுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஒரு சமயம் நிஷ்டையில் அமர்ந்திருந்த பார்வதி தேவி சற்றே விழித்து நோக்கும் போது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த பிரம்மனை தனது பர்த்தாவென்று எண்ணி பாதங்களைக் கழுவி பணிவிடை செய்ய, ஒரு மரியாதையின் பொருட்டு உமையவள் இவ்வாறு செய்கின்றாள் என்று பிரம்மதேவன் அதை ஏற்றுக் கொண்டிருக்கும் போது தற்செயலாக வந்த சிவபெருமான், இதைக் கண்டு சினந்து இருவருக்கும் 5 தலைகள் இருப்பதால் தானே இப்பிரச்சனை உருவாகிறதென்று நினைத்து பிரம்மதேவனின் 5 தலைகளில் ஒன்றைச் சிவன் கிள்ளியெறிந்து விட்டார். இதனால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு, பிரம்மாவின் கபாலம் (மண்டை ஓடு) சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது. அத்துடன் பல ஸ்தலங்களை தரிசித்து கொண்டு வந்த சிவன் கரம்பனூர் என்னும் உத்தமர் கோவிலுக்கு வந்த அங்கு மஹா லட்சுமி இட்ட பிச்சையால் கபாலம் நிறையப் பெற்ற பின் கண்டியூர் செல்லும் வழியில் சிவபெருமான் இத்தலத்தையும் வந்து வழிபட்டு சென்றார். இவ்வரலாறு கந்த புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் இத்தலத்திற்கு வந்து சென்ற வரலாறு பல நூல்களில் இல்லாவிட்டாலும் இங்கு கர்ண பரம்பரையாக வழங்கி வரும் செய்தியாகும். இத்தலத்தோடு தொடர்பு கொண்ட பல புராணங்களிலும் பேசப்படும் வரலாறு ஒன்று உண்டு. ஒரு ரிஷியானவர் தண்ணீருக்குள் மூழ்கி தவஞ் செய்வதில் பெருஞ் சக்தி பெற்று விளங்கினார். இதனால் அவர் மண்டுக மஹரிஷியென்றே அழைக்கப்பட்டார். இவர் ஒரு சமயம் தவத்தில் ஈடுபட்டிருக்கும் போது இவரைக் காண வந்த துர்வாச முனிவர் வெகுநேரம் காத்திருந்தார். ஆனால் மண்டுக மஹரிஷியோ தவத்திலிருந்து மீளவில்லை. இதனால் தன்னை அலட்சியப்படுத்துவதாகக் கருதிய துர்வாசர் சினந்து இம்முனிவரை மண்டூகமாகவே (தவளையாக) போகுமாறு சபித்தார். இந்த மண்டுக மஹரிஷி இவ்விடத்தில் தவமிருந்து மஹாவிஷ்ணு பிரத்யட்சமாகி துர்வாச முனிவரின் சாபத்தை நீக்கினார். இதனால் இவ்விடத்திற்கு மண்டுக புரி என்ற பெயரும் உண்டு.
932 : _ _ |a இக்கோயிலின் கருவறை விமானம் தாரக விமானம் என்னும் கட்டிடக்கலைப் பாணியைக் கொண்டு அமைந்துள்ளது. சதுரவடிவ கருவறையில் மூலவர் அமைந்துள்ளார். முன் மண்டபமும், தாயாருக்கு தனித் திருமுன்னும் (சந்நிதியும்) அமைந்துள்ளன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a ஸ்ரீரங்கம் கோயில், திருவானைக்காவல், திருமழபாடி, திருச்சென்னம்பூண்டி சிவன் கோயில்
935 : _ _ |a டோல்கேட்டில் இருந்தும், திருச்சியிலிருந்தும், லால்குடியிலிருந்தும் செல்லலாம். திருப்பேர் நகர் என்று அழைக்கப்படும் (அப்பக்குடத்தான்) சன்னிதியிலிருந்து கொள்ளிட நதிக் கரையை கடந்து நடந்தே வந்தால் சுமார் 2 கி.மீ. தூரம் தான் ஆகும்.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a திருஅன்பில்
938 : _ _ |a ஸ்ரீரங்கம்
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a ஸ்ரீரங்கம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000218
barcode : TVA_TEM_000218
book category : வைணவம்
cover images TVA_TEM_000218/TVA_TEM_000218_திருஅன்பில்_வடிவழகியநம்பி-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000218/TVA_TEM_000218_திருஅன்பில்_வடிவழகியநம்பி-கோயில்-0001.jpg

TVA_TEM_000218/TVA_TEM_000218_திருஅன்பில்_வடிவழகியநம்பி-கோயில்-0002.jpg

TVA_TEM_000218/TVA_TEM_000218_திருஅன்பில்_வடிவழகியநம்பி-கோயில்-0003.jpg

TVA_TEM_000218/TVA_TEM_000218_திருஅன்பில்_வடிவழகியநம்பி-கோயில்-0004.jpg